அன்னபூர்ணா திட்டத்தின் மூலம் ஆதரவற்ற 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, உணவுப் பாதுகாப்பு வழங்கும் பொருட்டு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியை, ஆணையாளர் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அவர்களின் உப ஒதுக்கீட்டின்படி மேற்படி பயனாளிகளுக்கு த.நா.நு,பொ.வா.கழகம் மெ.டன் ஒன்றிற்கு ரூ.5650/- செலுத்தி இந்திய உணவுக் கழகத்திலிருந்து அரிசியினை இயக்கம் செய்து மேற்படி பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இத்தொகையினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பட்டியல் சமர்ப்பித்து மெ.டன் ஒன்றுக்கு ரூ.5650/- மற்றும் போக்குவரத்துக் கட்டணம் ரூ.500/- சேர்த்து மொத்தம் ரூ.6150/- பெறப்பட்டு வந்தது. மேலும், ஆணையாளர் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து 2020-2021 ஆம் நிதியாண்டிலிருந்து இத்திட்டத்திற்கு உப ஒதுக்கீடு வரப்பெறவில்லை.
இயக்குநர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அவர்களின் ந.க.எண்.இ2/19399/2025, நாள்.25,02,2026 நாளிட்ட கடிதத்தில் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் அன்னப்பூர்ணா திட்ட பயனாளிகளுக்கு வழங்கும் அரிசிக்கான தொகை மற்றும் அரிசி நகர்வு செய்யப்படுவதற்காக போக்குவரத்து செலவினத்திற்கான தொகையும் சேர்த்து மாநில அரசு அன்னபூர்னா திட்டத்திற்கென நிதி ஒதுக்கீடு அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2025-2026 ஆம் நிதியாண்டிலிருந்து அன்னபூர்ணா திட்டதின் கீழ் மாவட்டங்களுக்கு நிதி உப ஒதுக்கீடு செய்ய இயலாது என கடிதம் வரப்பெற்றுள்ளது.






