தமிழ்நாடு அரசு, 2 வயது முதல் 4 வயது வரை உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்குதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அங்கன்வாடி மையங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கம் பணியை மேற்கொள்கிறது.
| வ எண் |
பொருட்களின் பெயர் |
மாதாந்திர தேவைகள் (மெ.டன் களில்) |
|
1 |
அரிசி (மாநில அரசு) |
1614.22 |
|
2 |
பருப்பு |
142.52 |
|
3 |
பச்சை பயறு |
39.12 |
|
4 |
கருப்பு கொண்டகடலை |
37.88 |
|
5 |
பால்மோலின் எண்ணெய் |
48,037(pouches) |
|
6 |
உப்பு |
39.80 |
இந்த திட்டத்திற்குத் தேவையான துவரம் பருப்பு , கொண்டகடலை, பச்சை பயறு மற்றும் பாமாயில் ஆகியவை TNCSC மூலம் டெண்டர் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000ல் தமிழ்நாடு வெளிப்படைத்தன்மையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி திறந்த டெண்டர் மூலம் வாங்கப்படுகிறது.
இரும்பு செறிவூட்டப்பட்ட மற்றும் இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பைப் பொறுத்தவரையில், அது நேரடியாக அரசு அறிவித்த விகிதத்தில் M/s. தமிழ்நாடு உப்பு நிறுவனத்திலிருந்து வாங்கப்படுகிறது.
மேலும் TNCSC போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து, தேவையான பொருட்களை அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படுகிறது.
உணவு பொருட்களின் கேட்பு பட்டியல் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்பட்டு பட்டியல் உண்டான தொகை மண்டல கழக கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (CMBF)
தமிழ்நாடு அரசு, அதன் GO No.43 Public (CM Breakfast) தேதியிட்ட 27.07.2022-ன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும், காலை உணவுத்திட்டம் வழங்கிட உத்தரவிடப்பட்டு ஆகஸ்ட் 2022 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமோலின் எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவை கோரப்படும் மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 36 பள்ளிகளில் பயிலும் 5941 மாணவ மாணவியருக்கும் மற்ற 16 மாநகராட்சியில் உள்ள 381 பள்ளிகளில் பயிலும் 37,740 மாணவ மாணவியருக்கும் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களில் உள்ள 11,128 பள்ளிகளில் பயிலும் 70,414 மாணவ மாணவியருக்கும் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு ரூ.7/- செலவினம் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள 12 சிற்றுண்டி வகைகளின் விலையின்படி ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு சராசரி செலவினம் ரூ.6.02 எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.7/-ல் தோராய செலவினம் ரூ.6.02 போக மீதமுள்ள தொகையை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஏதேனும் சிறு தானியங்களை கொண்டு சிற்றுண்டி தயாரித்து வழங்கும்போது ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்துகொள்ள இயக்குநர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கடித எண். 17570,2021 ச.உ.தி.2/2021 நாள் 11.08.2022 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டமானது 25.08.2023 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் இத்திட்டத்தில் பயனடைகின்றனர்.
மேலும், இத்திட்டமானது 15.07.2024 முதல் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவிப்பெறும் ஆரம்பப்பள்ளிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக துரத்துக்குடி மாவட்டத்தில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு 3,492 பள்ளிகளில் பயிலும் சுமார் 20,59,000 மாணவ மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
2025-2026 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட பொருட்களின் விபரம்
| வ எண் |
பொருட்கள் |
அளவு (மெ.டன் களில்) |
விற்பனை விலை |
|
1 |
அரிசி |
5757.088 |
26.94 |
|
2 |
துவரம்பருப்பு |
4106.488 |
152.47 |
|
3 |
பாமாயில் |
861164 (பாக்கெட்டுகள்) |
122.08 |
|
3 |
உப்பு |
384093(பாக்கெட்டுகள்) |
10 |






